துஆ
அல்லாஹுத் தஆலா கூறுகிறான் : என்னிடம் துஆச் செய்யுங்கள் உங்களின் துஆவிற்கு நான் பதிலளிக்கிறேன் என உங்கள் இறைவன் கூறுகிறான் ( 40:60 ) மேலும் கூறுகிறான் : எனது அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால் நிச்ச நான் சமீபமாக இருக்கிறேன்.என்னிடம் பிரார்த்தித்தால் பிரார்த்திப்பவனின் பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன் ( என நபியே நீர் கூறுவீராக ) . ( 2 : 186 ) . மேலும் கூறுகிறான் உங்களின் இறைவனிடம் பணிவாகவும் , அந்தரங்கமாகவும் துஆச் செய்யுங்கள் வரம்பு மீறுபவர்களை நிச்சயமாக அவன் நேசிக்க மாட்டான் ( 7:55 ) .
நபி ( ஸல் ) அவர்கள் கூறியதாக நுஃமானுப்னுபஷீர் ( ரலி ) அவர்கள் கூறினார்கள் : துஆவே வணக்கம் . நிச்சயமாக ரசூல் ( ஸல் ) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ( ரலி ) அவர்கள் கூறினார்கள் : அடியான் தனது இறைவனுக்கு மிக நெருக்கமாக இருப்பது அவன் சுஜுதிலிருக்கும் நிலையாகும் எனவே ( அதில் ) துஆவை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள் . ஆயிஷா ( ரலி ) அவர்கள் கூறினார்கள் : ரசூல் ( ஸல் ) அவர்கள் குறைந்த வார்த்தைகளில் நிறைந்த அர்த்தங்களை உள்ளடக்கிக் கொள்ளும் துஆவை விரும்பக்கூடியவர்களாகவும் மற்றவற்றை விடுபவர்களாகவும் இருந்தார்கள் : ரசூல் ( ஸல் ) அவர்கள் கூறிய தாக உபாதத் இப்னுஸ்ஸாமித் ( ரலி ) அவர்கள் கூறினார்கள் : முஸ்லிமான எந்த ஒரு அடியானும் ஏதேனும் ஒரு துஆவைச் செய்து அதை அல்லாஹ் அவனுக்கு கொடுக்காமல் விடுவ தில்லை அல்லது மறுமையில் அவன் கேட்டதைவிட சிறந்ததை அல்லாஹ் அவனுக்கு சேமித்து வைக்கிறான் . அல்லது அவனை விட்டும் தீங்குளை அவன் துஆ கேட்ட அளவிற்கு தடுத்து விடுகிறான் . ( இம் மூன்றில் ஒன்று கிடைப் பதற்கு நிபந்தனை ) பாவத்தையோ அல்லது சொந்தபந்தங்களை முறிப்பதையோ பற்றி பிரார்த்தனை செய்யாமலிருக்க வேண்டும் , மேலும் ரசூல் ( ஸல் ) அவர்கள் சொல்பவர்களாக இருந்தார்களென அபூதர் ( ரலி ) அவர்கள் கூறினார்கள் : ஒரு முஸ்லிம் தனது சகோதரனுக்காக மறைந்திருந்து செய்கின்ற துஆ அங்கீகரிக்கப்படும் . அவனது தலைப் பாகத்தில் ( அவனுக்காக ) ஏற்படுத்தப்பட்ட ஒரு மலக்கிருப்பார் . இவன் தனது சகோதரனுக்காக நன்மையை வேண்டி துஆச் செய்யும் போதெல்லாம் இவனுக்காக ஏற்படுத்தப்பட்ட அம்மலக்கு ஆமீன் எனவும் உனக்கும் இது போன்று கிடைக் கட்டுமாக ! எனவும் கூறுவார்.
🔥துஆ கேட்பதன் பயன்கள் :
🔥1.ஒரு வணக்கம் . அல்லாஹ் அல்லாதவர்களிடம் துஆக் கேட்பது கூடாது . யாரேனும் இறைவனல்லாதவனிடம் துஆக் கேட்டால் நிச்சயமாக அவன் இணைவைத்தவனாகி விடுகிறான் . ரசூல் ( ஸல் ) அவர்கள் துஆவை வணக்க மாகவும் , வணக்கத்திலேயே மிக முக்கியமாான கடமையாக வும் கணித்திருப்பதால் துஆவிற்கு மகத்தான அந்தஸ்திருப் பதை அறிந்து கொள் .
🔥2.ஜவாமிவுல் கலிமைக் கொண்டு துஆச் செய்வது விரும்பத் தக்கதாக்கப்பட்டிருப்பது போல துஆவில் சப்தத்தைத் தாழ்த் திக் கொள்வதும் விரும்பத்தக்கதாக்கப்பட்டிருக்கிறது. ஜவாமி கலிமென்பது குறைந்த வார்த்தைகளில் நிறைய அர்ததமுல்ல துஆ ஆகும்.
🔥3 - ஒரு மனிதன் தனக்கு அல்லது தனது பொருளுக்கு அல்லது தனது குழந்தைகளுக்கு பாதகமாக துஆச் செய் வது பற்றிய எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது .
🔥4 - முஸ்லிம்களுக்காக மறைவிலிருந்து துஆச் செய்வதை விரும்பத்தக்கதாக ஆக்கப்பட்டுள்ளது .
🔥5 - துஆச் செய்பவனுக்கு அவன் கேட்பது கொடுக்கப்படுவது கட்டாயமல்ல . எனினும் அவனது துஆவின் காரணமாக அவன் துஆக் கேட்ட அளவிற்கு அவனை விட்டும் தீமை தடுக்கப்படுகிறது அல்லது மறுமை நாளில் அவனுக்காக சேமித்து வைக்கப்பட்டு அதன் பால் அவன் மிகத் தேவையு டையவனாக இருக்கும் போது கொடுக்கப்படுவான் .
🔥6 - ஹராமான பொருளை உண்பதும் , , ஹராமான ஆடையை அணிவதும் துஆ ஏற்றுக் கொள்ளப்படுவதைத் தடை செய்து விடுகின்றன .
கல்வி
அல்லாஹ் கூறுகிறான் : கற்றவர்களும் , கல்லாதவர்களும் சமமாவார்களா ? என ( நபியே ) நீர் கேட்பீராக ( 39 : 9 )✔ .மேலும் கூறுகிறான் : உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் , கல்வி கொடுக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்து வான் ( 58:11 )✔. இன்னும் கூறுகிறான் " எனது நாயனே எனக்கு கல்வியை அதிகமாக்குவாயாக என ( நபியே ) நீர் கூறு வீராக ! ( 20 : 114 ) ✔. இன்னும் கூறுகிறான் நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு பயப்படுபவர்கள் அறிஞர்கள்தாம் ( 35:28 )✔ .
ரசூல் ( ஸல் ) அவர்கள் கூறியதாக முஆவியா ( ரலி ) அவர்கள் கூறினார்கள் " அல்லாஹ் யாருக்கேனும் நன்மையை நாடியிருந்தால் அவரை மார்க்கத்தில் விளக்கமுடையவராக்கி விடுவான்,இன்னும் ரசூல் ( ஸல் ) அவர்கள் கூறியதாக அனஸ் ( ரலி ) அவர்கள் கூறினார்கள் " யாரேனும் ஒருவர் கல்வியைக் கற்றுக் கொடுத்தால் அதைக் கொண்டு செயல்பட்டவரின் நன்மையும் அவருக்குக் கிடைக்கும் எனினும் செய்தவனின் கூலியில் எதுவும் குறைக்கப்படமாட்டாது ,இன்னும் ரசூல் ( ஸல் ) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ( ரலி ) அவர்கள் கூறினார்கள் " ஆதமின் மகன் மரித்து விட்டால் மூன்று காரியங்களைத்தவிர வேறு எல்லாக்காரியங்களும் அவனைவிட்டும் நின்றுவிடுகிறது . ( அவை ) நிலையான தர்மம் . பயனுள்ள கல்வி அவனுக்காகத் துஆச் செய்யும் நல்ல குழந்தை , மேலும் நபி ( ஸல் ) அவர்கள் கூறியதாக ஸஹ்லுப்னு ஸஃது ( ரலி ) அவர்கள் கூறினார்கள் " அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ் உன் மூலமாக ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது சிவந்த ஒட்டகங்களைவிட உனக்கு சிறந்ததாகும் , நபி ( ஸல் ) அவர்கள் கூறியதாக அப்துல்லா ஹிப்னு அம்ருப்னுல் ஆஸ் ( ரலி ) அவர்கள் கூறினார்கள் " என் மூலமாக ஒரு செய்தி தெரிந்திருந்தாலும் அதை பிறருக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
🔥பயன்கள் :
🔥1 - இந்த ஆயத்துக்களிலும் , ஹதீஸ்களிலும் கல்வியின் சிறப்பும் , அறிஞர்களின் சிறப்பும் விளக்கப்பட்டிருக்கிறது . கல்வியைத் தேடுவது சுவர்க்கம் புகும் காரணங்களில் ஒன்றாக இருப்பது போல மார்க்கத்தில் விளக்கம் பெறுவது அல்லாஹ் அடியானுக்கு நன்மையை நாடியிருப்பதின் மீது ஆதரமாக இருக்கிறது .
🔥2 - மக்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுப்பது , அவர்களுக்கு நன்மையை அறிவித்துக் கொடுப்பது , கல்வியை எத்தி வைப் பது இவை குறைவாயிருப்பினும் கூலி மகத்தானது . மேலும் அவை மனிதன் மரித்த பின்னும் பயனளிக்கின்றன .
🔥3 - கல்வியைத் தேடுவது உபரியான வணக்கங்களை விட மிகச் சிறந்தது .
அல்ஹம்துளிள்ளாஹ்
அல்லாஹ்வே நன்கறிந்தவன்
இதே போல் இன்னும் இஸ்லாமிய தகவல்களுக்கு : Follow The Outtamil
இக்கட்டுரை பற்றி எத்தனை உங்களுக்கு முன்பே தெரியும்? வேறு ஏதேனும் சுவாரஸ்யமான கட்டுரைகள் உங்களுக்குத் தெரியுமா? கீழே ஒரு கருத்தை இடுங்கள்!
இப்பொழுது என்ன?
பார்க்கவும் .